முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களது போராட்டத்தை வீடியோ எடுத்த புலனாய்வாளர்..! வீடியோ

0
43

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று (10) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது, சிவில் உடை தரித்த புலனாய்வாளர் போராட்டகாரர்களினை அருகே சென்று ஒவ்வொருவராக புகைப்படம் எடுத்த போது, இவ்விடத்தில் ஒவ்வொரு உறவுகளையும் புகைப்படம் எடுக்க வேண்டிய தேவை என்ன என கூறி துரத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யுத்தம் நிறைவடைந்த நாள்முதல் தமது உறவுகளுக்கான நீதி கோரி போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வாறாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் போராட்டங்களை இராணுவத்தினர், பொலிஸார், சிவில் உடை தரித்த புலனாய்வாளர்கள் போன்றோர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்றையதினம் இடம்பெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்களை சிவில் உடை தரித்த புலனாய்வாளர் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் விதமாக செய்யப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here