நாட்டின் இருவேறு இடங்களில் இரண்டு கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜாலா பகுதியில் வாக்குவாதம் அதிகரித்து நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டார். வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஓய்வு அறையில் மது அருந்திக் கொண்டிருந்த இரு கடை ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த கொலை நடந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கொலையை செய்த சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஜல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லகேகல பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு முற்றியதையடுத்து கணவரே இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. லகேகல, நாரங்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் லக்கல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், லக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.