டிசம்பர் 11 ஆம் திகதி புதன் கிழமையான இன்று உங்கள் ராசிக்கான பலன்கள்..!

0
63

மேஷம்:
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். ஆனால், எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும்.தேவையான பணம் கையில் இருப்பதால், உற்சாகமாகச் சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்களில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

ரிஷபம்:
உற்சாகமான நாளாக அமையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உற்சா கமாக செயல்படுவீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாப மும் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்கள் நன்றாக ஒத்துழைப்பார்கள்.

மிதுனம்:
இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால், உற்சாகமாக இருப்பீர்கள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.

கடகம்:
இன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமையிலிருந்து விடுபடுவீர்கள். உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனை நடப்பதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.

சிம்மம்:
தேவையான பணம் கையில் இருக்கும். காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்து விடுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனை களை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். விற்பனை வழக்கம் போல் இருக்கும். லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

கன்னி:
தந்தை வழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனையை நிறை வேற்றும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.

துலாம்:
உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள் வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்:
தெய்வ அனுகிரகம் நிறைந்த நாளாக இருக்கும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இருந்தாலும், பணியாளர்களால் செலவுகளும் ஏற்படக்கூடும்.

தனுசு:
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால், திடீர் செலவு களால் கையிருப்பு கரையும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படுவதுடன் பாராட்டும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும்.

மகரம்:
எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்குக் குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவும் ஒத்துழைப்பும் தருவார். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.

கும்பம்:
தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத் துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். என்றாலும் அதனால் பாதிப்பு இல்லை.

மீனம்:
இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், வார்த்தை களில் நிதானம் தேவை. வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவது அவசியம். அலுவலகத்தில் சக ஊழியர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here