மேஷம்:
காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். வியாபாரத்தில் பணியாளர்களாலும், பங்குதாரர்களாலும் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். சக வியாபாரிகளால் மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.
ரிஷபம்:
எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சி ஒன்றுக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்னை ஏற்படும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
மிதுனம்:
பல வகைகளிலும் அனுகூலமான நாளாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேற்றுமைகள் நீங்கி சுமுக உறவு ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உங்க ளுடைய முயற்சிகளுக்கு பிள்ளைகள், நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தெய்வப் பிரார்த்த னைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
கடகம்:
தந்தை வழி உறவுகளால் சங்கடம் ஏற்படக்கூடும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர் களால் சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கன்னி:
புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். வெளியூர்ப் பயணம் மேற்கொள் வதைத் தவிர்க்கவும். உடல் நலனில் கவனம் தேவை. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக் கூடும். அதிகாரிகளிடம் பேசும்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம். வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.
துலாம்:
பரபரப்புடன் செயல்படும் நாளாக இருக்கும்..வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறை வேற்றுவீர்கள். முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சலுகையும் பண உதவியும் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்:
எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். மறைமுக இடையூறுகள் விலகும். மனதில் தன்னம்பிக்கை பளிச்சிடும். மாலையில் கோயிலுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். தடைப்பட்டு வந்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். அலுவலகத்தில் சுறுசுறுப்புடன் உங்கள் பணிகளை விரைவாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.
தனுசு:
புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும்.
மகரம்:
புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும். உறவினர் களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப் பிடிக்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கல். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
கும்பம்:
அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிக ரிக்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர்களின் பணிகளையும் நீங்களே செய்யவேண்டி வரும். அதனால் அசதி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
மீனம்:
பொறுமையுடன் இருக்கவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பணிகளிலும் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணி யாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். பங்குதாரர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.