நடிகர் அல்லு அர்ஜுன் சற்றுமுன் கைது – வைரலாகும் வீடியோ.!

0
60

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புஷ்பா 2 பட வெளியீட்டின் போது பெண் ஒருவர் திரையரங்கில் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத் காவல்துறையினர் இன்று (13.12.2024) சற்றுமுன் அல்லு அர்ஜுனை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயது பெண் உயிரிழந்தார்.

இவரது இறப்பிற்கு காரணம் அல்லு அர்ஜுன்தான் என புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அர்ஜுனை கைது செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here