மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வாயிற் கதவுகளுக்கு அருகாமையில் ஒதுங்கும் குப்பைகளுடன் குறித்த சடலம் காணப்பட்டுள்ளது.
ஸ்தலத்திற்கு வருகை தந்த நுவரெலியா மாவட்ட பதில் நீதவான் அம்பகஹவத்தவின் விசாரணையை தொடர்ந்து சடலமானது நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,