யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேரும், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேரும், மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேரும் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றம் வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..
இதுவரை இக்காய்ச்சலினால் யாழ். மாவட்டத்தில் 06 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் இக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளாக தெரிவித்தார்.