கொடகவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிசோகோட்டை பகுதியில், தடியால் தாக்கப்பட்டதில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்ததாக, கொடகவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில், கல்பாய பல்லேபெத்த பிரதேசத்தில் வசிக்கும் 82 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், குறித்த வயோதிப பெண்ணின் மகன் அவரை தடியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சடலம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கொடகவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.