மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு தற்போது இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதிபவனில் ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சிக்குப் பிறகு, ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்த உள்ளார்.
பின்னர் ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஹைதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் அங்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இருதரப்பு கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டு ஊடக அறிக்கை வௌியீடு இடம்பெறவுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி மற்றும் இந்திய துணை ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை ராஷ்டிரபதிபவனில் இடம்பெறவுள்ளது.