தலைமன்னார் சிறுமி ப.டு.கொ.லை – தப்பிச் சென்ற குற்றவாளி 6 மாதங்களின் பின் கைது.!

0
112

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்பிரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேககபர் தடுப்பிலிருந்து தப்பிச் சென்ற நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது..

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படிருந்த நிலையில் அவர் தப்பிச் சென்றுள்ளார்.

தப்பிச் சென்ற சந்தேகநபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் மீண்டும் கைது செய்யப்பட்டு, தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தலைமன்னார் பொலிஸார் தடுத்து வைத்து மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை (16) காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சந்தேகநபர் கடந்த மே மாதம் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வேளை, வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றார்.

கடந்த 6 மாதங்களாக குறித்த நபர் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here