யாழில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த இளம் குடும்பப்பெண்.!

0
70

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையில் திடீர் சுகவீனம் காரணமாக குடும்பப் பெண்ணொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

மாவைகலட்டி, தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த செல்வரூபன் அருள்வாணி (வயது-44) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கும் அவரது குழந்தைக்கும் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அளவெட்டி வைத்தியசாலைக்கு சென்று மருந்து எடுத்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

வீடு சென்ற பெண்ணுக்கு மீண்டும் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் மயக்கமுற்றுள்ளார், அவரை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here