கடலலையில் அள்ளுண்டு சென்ற ரஷ்ய குடும்பம் மீட்ப்பு.!

0
9

ஹிக்கடுவை கடற்கரையில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜைகள் 4 பேர், கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு குறித்த நால்வரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும் 39 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் 07 மற்றும் 13 வயதுடைய இரு சிறுமிகளும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் ரஷ்ய பிரஜைகள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹிக்கடுவை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஹேவகே, பொலிஸ் கான்ஸ்டபிள் 96793 ஏக்கநாயக்க, பொலிஸ் கான்ஸ்டபிள் 102748 திஸாநாயக்க மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 105456 ஜயசிங்க ஆகியோரால் இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here