யாழில் சொகுசு பஸ் – லாண்ட்மாஸ்டர் ரக உழவு இயந்திரம் மோதி விபத்து – ஐவர் காயம்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வருகை தந்த சொகுசு பஸ் – உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (18) புதன்கிழமை அதிகாலை வேளை யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் பஸ்ஸின் சாரதி நடத்துனர் காய மடைந்துள்ள நிலையில் உழவு இயந்திரத்தின் சாரதி உட்பட ஐவர் காயங்களுக்கு உள்ளாகி உள்ள நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.