சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற இளைஞன் கைது.!

0
25

ஐஸ் மற்றும் ஏனைய போதைப் பொருளான ஹெரோயினுடன் சிவனடி பாத மலை யாத்திரைக்கு வந்த இளைஞன் ஒருவர் ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்ய பட்ட சந்தேகநபர், கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் எனவும், அவர் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே ரயிலில், இன்னொரு குழுவுடன் வந்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீத வான் நீதி மன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர் ஹட்டன் போதைப் பொருள் ஒழிப்பு பொலிசார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here