வலையிட்டு சிறுத்தையொன்றை பிடித்து அதை கொன்று சிறுத்தையின் தலை மற்றும் நான்கு கால்கள் வெட்டிக்கொண்டு சென்றுள்ள சம்பவம் புதன்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்டத்தின் காட்டு பகுதியில் சிறுத்தை ஒன்று சடலமாக கிடப்பதாக ஹட்டன் பொலிஸாருக்கு, தோட்டத் தொழிலாளர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்து பார்வையிட்டபோது குறித்த சிறுத்தையின் தலை துண்டிக்கப்பட்டு நான்கு கால்கள் வெட்டப்பட்டிருந்ததாக நல்லத்தண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
10 வயது மதிக்கத்தக்க குறித்த சிறுத்தையின் சடலம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.