லண்டனில் இருக்கும் நபர்களுக்கு போலி TID கடிதம் அடித்துக்கொடுத்த இருவர் முல்லைத்தீவில் கைது.!

0
94

முல்லைத்தீவில் இருந்துகொண்டு வெளிநாட்டில் அகதிகள் தங்சம் கோரிய மூவருக்கு போலியான பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவு விசாரணைக்கு அழைத்தது போல் கடிதம் அச்சிட்டு அனுப்பிவைத்த நபர்கள் இருவரை முல்லைத்தீவு பொலீசார் 18.12.24 இன்று கைது செய்துள்ளார்கள்.

லண்டனில் இருக்கும் நபர்கள் அகதிகள் உரிமை கோரி அதற்கு இலங்கையில் வாழமுடியாததற்கான காரணம் என்ன என்பதை இங்கிருந்து போலியான முறையில் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவு விசாரணைக்கு அழைத்துள்ளதான கடிதத்தினை வடிவமைத்து அதற்கு அச்சு அசேலாக இறபர் முத்திரையும் குத்தி ஒரு கடிதம் இரண்டரை இலட்சம் ரூபாவிற்கு பெற்று அனுப்பியுள்ளார்கள்.

இந்த தகவல் லண்டனில் அகதிகள் தஞ்சம் கோரிக்கையாளர்களின் விசாரணையினை மேற்கொண்ட அன்நாட்டு அதிகாரிகளின் ஊடாக முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர்கள் செல்வபுரம், முல்லைத்தீவு என்ற முகவரியினை சேர்ந்த 28 மற்றும் 33 அகவையுடை இருவரை கைது செய்துள்ளார்கள்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர்கள் அவ்வாறு போலியான கடிதம் தயாரித்து விற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இன்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here