ஹனிமூனுக்கு சென்று வீடு திரும்பிய புதுமண தம்பதி உட்பட 4 பேருக்கு நேர்ந்த சோகம்.!

0
118

ஹனிமூனுக்கு வெளிநாடு சென்றுவிட்டு, திரும்பிய புதுமண தம்பதியர் விமான நிலையத்தில் இருந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது நேர்ந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் புதுமண தம்பதியரைக் காரில் அழைத்துச் சென்ற இருவரும் சேர்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இந்தியாவின் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ரன்னி பகுதியை சேர்ந்தவர் எப்பன் மத்தேய். இவரது மகன் நிகில் எப்பனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிஜு ஜார்ஜ் மகள் அனுவுக்கும் கடந்த மாதம் 30ம் தேதி திருமணமானது.

இதையடுத்து ஹனிமூனுக்காக நிகில், அனு தம்பதியர் மலேசியாவுக்கு சென்று விட்டு, நேற்று அதிகாலை கேரளா திரும்பினர்.

தம்பதியரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து அவர்களது தந்தையர் இருவரும் காரில் வீட்டிற்கு அழைத்து சென்றனர். இவர்கள் ஓட்டிச் சென்ற கார் முரிஞ்சக்கல் என்ற பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வந்த பேருந்தில் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த புதுமண தம்பதி நிகில், அனு மற்றும் இவர்கள் இருவரின் தந்தையர் என 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கார் வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

ஹனிமூனுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது கார் விபத்தில் சிக்கி புதுமண தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here