நவகத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தரனகஹவெவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கியதில் சிறுமி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நவகத்தேகம – குருகெட்டியாவ பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாதுகாப்பற்ற மின் கம்பியில் இருந்து மின்சாரம் பெற்று பிளெண்டரை இயக்க முற்பட்ட போது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.