உடலுக்கும் உயிருக்கும் தீங்கு ஏற்படுத்தும் கசிப்பிற்கு மாற்றீடாக குறைந்த விலை மதுபான வகையொன்று விரைவில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் யூ.எல். உதய குமார பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்குள் புதிய மதுபான போத்தல் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
மேலும், கலால் வரி வருவாய் 30 சதவீதம் குறைந்ததற்கு சட்டவிரோத மதுபானமே காரணம் என்றும், ஆய்வுகளின்படி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே இந்த போலி மதுபானங்களில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில் இந்த புதிய மதுபான போத்தல்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர் சோதனைகளால் மாத்திரம் சட்டவிரோத மதுபானங்களில் இருந்து மக்களை காப்பாற்ற முடியாது என கண்டறியப்பட்டுள்ளதாகவும்,
இந்த சோதனை நடவடிக்கைகளின் போது இந்த புதிய மாற்று மது போத்தல்களை மக்களுக்கு அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.