O/L மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பு.!

0
9

2025 மார்ச் இல் நடைபெறவுள்ள “பிரிவெனா சாதாரண தரப் பரீட்சை – 2024 (2025)”க்கான இணையவழி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்காக, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://donenets.lk க்கு பிரவேசித்து “எமது சேவைகள்” என்பதன் கீழ் உள்ள “Piriven Exam Information Center” மீது Click செய்து அல்லது, https://onlineexams.gov.lk/eic/index.php/piriven ஊடாக பிரவேசிக்க முடியும்.

இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான வழிமுறைகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இணையவழி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது 2024 டிசம்பர் 20 ஆம் திகதியன்று காலை 9:00 மணிக்கு ஆரம்பமாகி 2025 ஜனவரி 15 ஆம் திகதியன்று மதியம் 1:00 மணிக்கு நிறைவடையவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here