டிசம்பர் 21 ஆம் திகதி சனிக் கிழமையான இன்று உங்கள் ராசிக்கான பலன்கள்..!

0
60

மேஷம்:
புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.

ரிஷபம்:
காலையில் சற்று சோர்வாக இருக்கும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.

மிதுனம்:
மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட சிறுசிறு பிணக்குகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு வந்து சேரும்.. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள்.

கடகம்:
எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். திடீர் செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது அவசியம். வியாபாரத்தில் பணியாளர் களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.

சிம்மம்:
மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும். ஆனால், புதிய முயற்சி எதையும் இன்று தொடங்கவேண்டாம். திடீர் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைத்தாலும் செலவுகளும் அதிகரிக்கும்.

கன்னி:
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். ஆனால், போதுமான பணம் இருப்பதால் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மாலையில் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி அலுவ லகத்தில் பணிச்சுமை இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குச் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும்.

துலாம்:
அதிர்ஷ்டகரமான நாள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். உங்களு டைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வாழ்க்கைத்துணை வழி உறவினர் களால் ஆதாயம் உண்டாகும். அலுவல கத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

விருச்சிகம்:
தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்று வீர்கள். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் ஓரளவுக்கு நன்மை ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பங்குதாரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

தனுசு:
உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே காணப்படும். பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள்.

மகரம்:
இன்று எதிலும் சற்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். மாலையில் குடும்பத்துடன் கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துச் செய்யவேண்டி இருந்தாலும், உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும்.

கும்பம்:
சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். அதிகாரி அனுசரணையாக நடந்துகொள்வார். சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

மீனம்:
எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறை வேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். மாலையில் உறவினர் அல்லது நண்பர் வீட்டுக்குச் செல்லும் வாய்ப்பும் அதனால் மனதில் உற்சாகமும் ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here