சற்றுமுன் ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் விபத்து..!

0
337

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (21) காலை விபத்துக்குள்ளானது.

பஸ் வீதியை விட்டு விலகி அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தின் போது பஸ்ஸில் 20 முதல் 25 பேர் வரை பயணித்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் காயமடைந்த நிலையில் திக் ஓயா மற்றும் வட்டவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பஸ் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிலர் கண்டி வைத்தியசாலைக்கு, மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here