ரஷ்யாவின் உரம் தரமானது.. அரசாங்கம் அறிவிப்பு.!

0
24

ரஷ்ய அரசாங்க நிறுவனம் ஒன்றினால் உற்பத்தி செய்யப்பட்டு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மியுரேட் ஒப் பொட்டாஸ் அல்லது MOP உரத்தின் கையிருப்பின் தரம் தொடர்பான அறிவிப்பை விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு வெளியிட்டுள்ளது.

உரக் களஞ்சியத்தின் நிறம் தொடர்பில் விவசாயிகளுக்கும் விவசாய அமைப்புக்களுக்கும் இடையில் சில பேச்சுக்கள் இடம்பெற்றதுடன், இது தொடர்பில் அமைச்சின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட உரத்தின் கலவை மற்றும் ஏனைய தரங்களை பரிசோதித்த பகுப்பாய்வு அறிக்கையின் பிரகாரம் உரம் கையிருப்பு முறையான தரத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

அதன் தாது உப்புகளை வைத்து உரத்தின் நிறம் தீர்மானிக்கப்படுவதாக தெரியவிக்கப்படுகிறது.

இரும்பு ஒக்சைட் இருக்கும் போது அதன் நிறம் சிவப்பு என்றும், இல்லாத போது வெண்மை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரங்களின் செயல்திறனில் எந்த மாற்றமும் இல்லை மற்றும் அதே அளவு பொட்டாசியத்தை வழங்குகின்றன.

இந்த உரத்தின் தரம் தொடர்பில் ஆராய்ந்த விவசாய அமைச்சின் மண் தொடர்பான விசேட நிபுணர் ரேணுகா சில்வா, அந்த உரம் தரமானது என உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக தேவையற்ற அச்சமின்றி உரங்களை பயன்படுத்த முடியும் என அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here