மதுராகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாத்தளை – குருணாகல் வீதியில் லோட்டன் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதுராகொட பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை இடம் பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வேனின் சாரதியும் பின்புறத்தில் அமர்ந்திருந்த மூன்று பெண்களும் காயமடைந்துள்ள நிலையில் யட்டவத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வேனின் சாரதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடையவர் ஆவார்.
காயமடைந்த மூன்று பெண்களும் மேலதிக சிகிச்சைக்காக மாத்தளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுராகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.