திருகோணமலையில் சோழன் உலக சாதனை படைத்த 4 வயது சிறுவன்.! Video

0
33

திருகோணமலை, கிண்ணியாவைச் சேர்ந்த நான்கு வயது *அரிப்,* தொடர் பயிற்சியின் காரணமாக கிடைத்த அதிக ஞாபகத் திறன் மூலம் மனித உடலின் முக்கிய எலும்புகல் 41 இன் பெயர்களை 13:46 நொடிகளில் ஒப்புவித்தார்.

பவர் ஆஃப் டென்(power of ten) எண்களை ஒரு நிமிடம் மற்றும் 6 நொடிகளில் ஒப்புவித்தார்.

41 பெரிய எலும்புகளுடன் இணைந்திருக்கும் மற்றைய எலும்புகளின் பெயர்களை ஒப்புவித்தார்.

ஒன்று முதல் 100 வரையான ஓடினல் (Ordinal) எண்களை 42 நொடிகளில் ஒப்புவித்தார், அனைத்து டெசிமல் (Decimal) எண்களையும் ஒரு நிமிடம் மற்றும் 17 நொடிகளில் ஒப்புவித்த அதேவேளை அவற்றை வேகமாக எழுதியும் காட்டினார்.

நடுவர்கள் குறிப்பிட்ட எலும்புகளை துல்லியமான அடையாளம் காட்டிய அதேவேளை எலும்புகள் இருக்கும் இடங்களையும் சரியாகத் தொட்டுக் காட்டினார்.

40 வரையான பெரிய இலக்கங்களை (Big numbers) 4 நிமிடங்கள் மற்றும் 30 நொடிகளில் வாசித்தார். அனைத்து ப்ராக்சன் (fraction) எண்களையும் எழுதிய அதேவேளை சரளமாக வாசிக்கவும் செய்தார்.

டெசிமல்களை (Decimals) ப்ராக்சனாக( fractions) மாற்றிய அதேவேளை ப்ராக்சன்களை டெசிமல்சாக மாற்றினார்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் விரைவாக கூறியும், எழுதியும், வாசித்தும் *அரிப்* செய்த முயற்சியை, உலக சாதனையாக, சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்தனர் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின், இலங்கை கிளையின் துணைச் செயலாளர், கதிரவன், திருகோணமலை மாவட்டத் தலைவர், இன்பராசா, திருகோணமலை மாவட்டப் பொதுச் செயலாளர், எம்.தனராஜ் மற்றும் சுயந்தன், விக்ணேஷ்வர ராஜா, தலைமைச் செயற்குழு உறுப்பினரான இயன்முறை மருத்துவர் மொஹமட் நஸ்மி மற்றும் செயற்குழு உறுப்பினரான எம்.எஸ்.எம். பர்சான் போன்றோர் கலந்துகொண்டார்கள்.

சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்துடன் இணைந்து பீப்பிள் ஹெல்பிங் பீப்பள் பவுண்டேஷன் நடத்திய இந்த நிகழ்வு கின்னியா மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு கின்னியாவின் பிரதேசச் செயலாளர் திரு.எம்.எச்.மொஹமட் கனி அவர்கள் முன்னிலை வகித்தார். கின்னியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.எம்.ச்.ஹீனதுல் முனவ்ரா சிறப்பு விருந்தினராக பங்கு கொண்டார்.

சோழன் உலக சாதனை படைத்த சிறுவன் *அரிப்பிற்கு* சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், நினைவு கேடயம், தங்கப்பதக்கம், அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவை வழங்கிப் பாராட்டப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here