திருமணமாகி ஒரே வாரத்தில் கணவர் மீது சந்தேகம்; இளம்பெண் எடுத்த முடிவு.!

0
40

திருமணமாகி ஒரு வார காலமே ஆன நிலையில் கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த நெலமங்களா தாலுகா பாகலகுண்டே பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா.

அதே பகுதியில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்த நவீன் என் பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் ஐஸ்வர்யா, கணவர் நவீனின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நவீன், மனைவியிடம் கூறாமல் தனியாக தர்மஸ்தலாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். இதை அறிந்த ஐஸ்வர்யா, நவீன் வீடு திரும்பியதும் கடந்த ஒரு வாரமாக தகராறில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று காலை ஏற்பட்ட தகராறில் கோபம் அடைந்த ஐஸ்வர்யா, படுக்கை அறையில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பாகலகுண்டே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நவீன் தர்மஸ்தலாவுக்கு பெண் ஒருவருடன் சென்றதாக கருதி மனமுடைந்து ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here