கடலில் நீராட சென்ற மூவரின் சடலங்களும் மீட்ப்பு.!

0
43

நேற்றைய தினம் அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி உமிரி கிராமத்தை சேர்ந்த மூவர் கடலில் நீராடும் போது கடலில் மூழ்கியவர் காணாமல் போனவர்கள் இன்றைய தினம் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

குறித்த சடலங்கள் தாண்டியடி, மற்றும் திருக்கோவில் பகுதிகளில் சடலங்களாக கரையோதுங்கியுள்ளது.

இதில் 15,17 வயதுகள் கொண்ட இரண்டு சிறுவர் மற்றும் 38 வயதுடையவர்களே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். காணாமல்போன 15 வயது சிறுவனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது, மற்றைய இருவரின் சடலங்கள் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது

சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் தாண்டியடி உமிரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மயில்வாகனம் நந்தராஜ் வயது – 38, நந்தராஜ் சசிகுமார் வயது – 15 மற்றும் வித்தியாகரன் டிலுசன் வயது -17 ஆகியோர சடங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்க்கப்பட்ட சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here