புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி இளம்பெண் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு ரூ.2 கோடி நிதியுதவியை புஷ்பா 2 படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியான நடிகர் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், படத்தின் சிறப்பு காட்சிக்காக ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
அவரது மகனும் பாதிக்கப்பட்டு தற்போது கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே பெண்ணின் மரணம் தொடர்பாக அல்லு அர்ஜுன் மீதும், திரையரங்கு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் தெலுங்கானா அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அல்லு அர்ஜுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இன்று ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.