முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்.!

0
257
Common Photo

பண்டாரவளை – எட்டம்பிட்டிய வீதியில் 07 ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (26) மாலை இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பாறை மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ள நிலையில் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பதுளை – பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார்.

இதனையடுத்து முச்சக்கரவண்டியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here