யாழில் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் கைது.!

0
9

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வைத்து 120 மில்லிகிராம் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here