மட்டக்குளி – சமித்புர பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நேற்று (29) பிற்பகல் புகுந்த சிலர் அங்கிருந்த நபரை கடத்திச் சென்று தாக்கி, கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகாயமடைந்த நிலையில், வாழைத்தோட்டம் பகுதியில் விட்டுச் சென்றுள்ளதாக மட்டக்குளிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடத்தலுக்காக முச்சக்கர வண்டியில் ஆறு பேர் வந்ததாக கூறப்பட்டாலும், முச்சக்கர வண்டிகளிலும் மோட்டார் சைக்கிள்களிலும் அதிகமானோர் வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.