மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு.!

0
134

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தை அண்மித்த பகுதியில் கட்டடமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

புத்தளம் – பழைய மன்னார் வீதியில் 2ஆம் கட்டை பகுதியில் நேற்று மாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில் பலஞ்சியின் மீது மின்சாரம் பாய்ந்ததில் அதனை தூக்கிச் சென்ற 4 பேர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.

இருப்பினும், அவர்களில் ஒருவர் தூக்கி விசப்பட்ட நிலையில், உயிர் பிழைத்துள்ளார். எனினும் ஏனைய மூவரும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here