கடந்த 25 ஆம் திகதி அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி உமிரி கிராமத்தை சேர்ந்த தந்தை, மகன், பேரன் ஆகிய மூவர் கடலில் நீராடும் போது கடலில் மூழ்கி சடலங்களாக மீட்கப்பட்டனர்.
தாண்டியடி உமிரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மயில்வாகனம் நந்தராஜ் வயது – 38, நந்தராஜ் சசிகுமார் வயது – 15 மற்றும் வித்தியாகரன் டிலுசன் வயது -17 ஆகியோர சடங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்களது இறுதி கிரிகைகள் அவர்களது ஊரில் நடைபெற்று 3 பேரின் உடல்களும் ஒரே புதைகுழியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவமானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.