லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஓய்வுபெறும் நிலையில், இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவியேற்கவுள்ளார்.
மேலும், இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியான ரியர் அட்மிரல் காஞ்சன பனகொட, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இலங்கை கடற்படையின் 26 ஆவது தளபதியாக பதவியேற்க உள்ளார்.
அவர் வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கு பதிலாக நியமிக்கப்படுவார்.
இதற்கிடையில், ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியிலிருந்தும் (CDS) இலங்கை இராணுவத்தில் செயலில் உள்ள சேவையிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளார்.