டிசம்பர் 31 ஆம் திகதி செவ்வாய்க் கிழமையான இன்று உங்கள் ராசிக்கான பலன்கள்..!

0
82

மேஷம்:
மேஷராசி அன்பர்களே! மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். தந்தையின் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவ தில் தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உதவி கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் சோர்வு உண்டாகும். ஆனால்,பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

ரிஷபம்:
ரிஷபராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அக்கம்பக்கத்திலிருப்பவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால், நண்பர்களின் சந்திப்பு ஆறுதல் தரும். அலுவல கத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் உதவியை எதிர்பார்ப்பதில் பயனில்லை. வியாபாரத் தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.

மிதுனம்:
மிதுனராசி அன்பர்களே! பல வகைகளிலும் அனுகூலமான நாள். முக்கிய முடிவு எடுப்பதற்கு முன்பு வாழ்க்கைத் துணையுடன் ஆலோசனை செய்வது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டா கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலுத்துக்கொள்ளாமல் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும்.

கடகம்:
கடகராசி அன்பர்களே! அனுகூலமான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு எதிர்பாராத பணவர வுக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்களை எதிர்த்துப் பேசியவர்கள் பணிந்து வருவார்கள். சகோதரரிடம் கேட்ட உதவி கிடைக்கும். அலுவல கத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். பங்குதாரரின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்:
சிம்மராசி அன்பர்களே! பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியிடங்களில் சாப்பிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். சிலருக்கு பிள்ளைகள் வகையில் சங்கடம் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

கன்னி:
கன்னிராசி அன்பர்களே! புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவி கிடைப்பதால் உற்சாகமாக முடிப்பீர்கள். சிலநேரங்களில் மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக் கூடும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள்.

துலாம்:
துலாராசி அன்பர்களே! இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார் கள். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டா கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.

விருச்சிகம்:
விருச்சிகராசி அன்பர்களே! உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால், மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. முக்கிய முடிவு எடுப்பதாக இருந் தால், குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்யவும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருந்தாலும், திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்.

தனுசு:
தனுசுராசி அன்பர்களே! இன்று எதிலும் பொறுமை அவசியம். உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். புதிய முயற்சி சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும். மாலையில் நீண்ட நாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். அதிகாரி களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும்.

மகரம்:
மகரராசி அன்பர்களே! தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக் கூடும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வகையில் திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் குறைவாகத்தான் கிடைக்கும்.

கும்பம்:
கும்பராசி அன்பர்களே! எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆதாயமும் தருவதாக அமையும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். அலுவலகத் தில் சக பணியாளர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.

மீனம்:
மீனராசி அன்பர்களே! காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத செலவு களால் கடன் வாங்க நேரிடும். கூடுமானவரை வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்த்து விடவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். தந்தைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்கள் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here