மலையகத்தில் இரத்த உறவுகளால் சகோதரன் படுகொலை.. நடந்தது என்ன..?

0
118

தந்தையும், இளைய மகனும் இணைந்து மூத்த மகனை பொல்லால் அடித்துக் கொலை செய்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டன்சினன் தோட்டத்தின் கீழ் பிரிவு பகுதியில் வசிக்கும் சிக்கன் நடேசன் நவின்குமார் என்ற 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

(30) அன்று மாலை, தந்தையும், மூத்த மகனும் அதிக மது அருந்தியுள்ளனர் பின்னர் தந்தை வீட்டிற்கு வந்தபோது, மூத்த மகன் வீட்டில் அதிக ஒலியில் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்துள்ளார்.

தந்தை மகனிடம் ஒலியைக் குறைக்கச் சொல்ல, கோபமடைந்த மகன் தந்தையை தாக்கியுள்ளார், பின்னர் தனது தம்பியையும் கட்டையால் தாக்க, கடைசியில் தம்பியும், தந்தையும் சேர்ந்து குறித்த மூத்த மகனை பொல்லுகளால் அடித்து கொலை செய்துள்ளதாக கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

படுகொலை செய்யப்பட்ட மூத்த மகன் தாக்கியதில் காயமடைந்த தந்தையும் (வயது 46), தம்பியும் (வயது 16) பொலிஸ் பாதுகாப்பில் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

படுகொலை செய்யப்பட்ட ஒரு பிள்ளையின் தந்தையின் சடலம் நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here