உல்லாசத்திற்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!

0
89

இந்தியாவின் தென்காசி மாவட்டம், சிவகிரி, அம்பேத்கர் தெற்குத் தெருவைச் சேர்ந்த ராமேஸ்வரன் மனைவி பாஞ்சாலி வயது (39) ஆவர்.

நேற்றிரவு இவர் சிவகிரி மெயின்ரோட்டில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவர் பாஞ்சாலியிடம் தகராறு செய்ததோடு அவரை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே பாஞ்சாலி இறந்தார்.

இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில் வாசுதேவநல்லூரை சேர்ந்த கூலித் தொழிலாளி சமுத்திரவேல் (44) என்பவர், பாஞ்சாலியை கத்தியால் குத்திக் கொலை செய்தது, தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

போலீசில் சமுத்திரவேல் அளித்துள்ள வாக்குமூலத்தில்…

கணவரை விட்டு பிரிந்து வாழும் பாஞ்சாலிக்கும் எனக்கும் தொடர்பு இருந்தது. இதனால் பாஞ்சாலியிடம் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். ஆனால் அவர், மகன்கள் பெரியவர்களாகி விட்டதால் ஆசைக்கு இணங்க மறுத்தார். இந்நிலையில், அவர் கடைக்கு வந்தபோது நான் அவரை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். அவர் மறுக்கவே சரமாரியாக கத்தியால் குத்தினேன். இதில் அவர் இறந்துவிட்டார். என்னை போலீசார் பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட சமுத்திரவேலை சிவகிரி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here