குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்த தாய்..!

0
106

தாயொருவர் தனது சிறு குழந்தையைக் கொன்றதுடன், அவளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அநுராதபுரம் – பிந்துன்கட பகுதியில் இருந்து பதிவாகியுள்ளது.

சந்தேகத்திற்குரிய தாயார், குழந்தையின் உடலில் பெற்றோலை ஊற்றி தீ மூட்டியதோடு, தனது உடலிலும் பெற்றோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் 39 வயதுடைய தாயும், 2 வயது 9 மாத பெண் குழந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தலாவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று (31) விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

உயிரிழந்தவர் பிந்துன்கட பிரதேசத்தில் உள்ள மகளிர் சங்கத்தின் பொருளாளராக கடமையாற்றியதாகவும், பணப்பிரச்சினை காரணமாக சிறுமியை கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவரது கணவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலங்கள் தற்போது அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here