இலங்கை மத்திய வங்கியின் இன்றைய (03.01.2025) நாணய மாற்று விகிதங்கள் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 289 ரூபாவாகவும் விற்பனை விலை 297.64 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295.50 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 307.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்டேர்லிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356.59 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 370.78 ரூபாவாகவும் உள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199.53 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 208.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177.66 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 186.96 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.