கடந்த 25ம் திகதி இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரியும், விபத்துக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று மாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி – 155 ம் கட்டை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற உள்ளதாக அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகரில் கடந்த 25 ஆம் திகதி இடம் பெற்ற டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவ தினம் உயிரிழந்தது. சிகிற்சை பெற்றுவந்த தாயார் நேற்றைய தினம் உயிரிழந்தார். இந்த சம்பவம் வட மாகாணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
விபத்துக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற உள்ளதாக சமூக ஊடகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது.