மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
ஆசிரியையான குறித்த யுவதி தனது வீட்டின் அறையினுள் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளார்
சம்பவத்தில் இ.கத்தரீனா (வயது-23) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சடலத்தை பார்வையிட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் பிரேதத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும்படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்தார்.
விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.