புதுக்குடியிருப்பு – விசுவமடு பகுதியில் தந்தை, மகன் கைது.!

0
96

புதுக்குடியிருப்பு விசுவமடு பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை, மகன் என இருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று (03.01.2025) கைது செய்யப்பட்டுள்ளனர்.

2023 ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பு விசுவமடு 10ஆம் கட்டை பகுதியில் வீட்டு தளபாடங்கள், மோட்டார் சைக்கிள் என்பன களவாடப்பட்டிருந்தது. குறித்த திருட்டு சம்பவம் தாெடர்பாக வீட்டு உரிமையாளர்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் போடப்பட்ட முறைப்பாட்டுக்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் குறித்த திருட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் திருடிய பொருட்களுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

1200000/- மதிப்புள்ள சொத்து திருட்டு போயுள்ளதாகவும், குறித்த வீட்டு உரிமையாளர் ஜேர்மனியை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும், இவர் பொலிஸ் மா அதிபரிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய புன்னை நீராவி விசுவமடுவில் வசிக்கும் தந்தை (72-வயது), மகன் (24-வயது) கைது செய்யப்பட்டதுடன், திருடப்பட்ட பாெருட்களும் மீட்கப்பட்டுள்ளது.

களவு எடுத்தவர்களும் களவு கொடுத்தவர்களும் சொந்தக்காரர்கள் எனக் கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் களவெடுத்த பொருட்களுடன் முற்படுத்தப்பட இருக்கின்றார்கள்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here