புதுமாப்பிள்ளையை நைசா பேசி கழட்டி விட்ட இளம்பெண்.. பின்னர் நடந்த சம்பவம்.!

0
63

தமிழ்நாடு – நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த 27 வயது வாலிபருக்கும், கருப்பூரை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் கடந்த நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. மணமகன் புது மனைவியுடன் புத்தாண்டை முன்னிட்டு கருப்பூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு விருந்துக்கு வந்துள்ளார். அப்போது, ​​புத்தாண்டுக்கு புது ஆடைகள் வாங்க விரும்புவதாக மனைவி கூறியபோது, ​​அந்த வாலிபர், திருச்செங்கோடு சென்று புது ஆடைகள் வாங்கி வரலாம் என மனைவியிடம் கூறியுள்ளார்.

ஆனால் அந்த இளம்பெண் சேலத்தில் துணி வாங்கினால் நன்றாக இருக்கும் என்று கூறிவிட்டு கடந்த 1ம் தேதி கணவரை சேலம் டவுனுக்கு அழைத்து வந்தார். அங்கு ஒரு கடைக்கு சென்று துணிகளை வாங்கிக்கொண்டு இருவரும் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு வந்தனர். அப்போது,​​ பெண் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடியும் மனைவியை காணவில்லை. பின்னர், டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் காணாமல் போன பெண் நேற்று டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

கணவனை பிரிந்து காணாமல் போன புதுப்பெண் தான் தான் என போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோருக்கும், கணவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் காவல் நிலையத்துக்கு விரைந்தனர். அப்போது, ​​இளம்பெண் கழுத்தில் அணிந்திருந்த தாலியை கழற்றி காவல்நிலையத்தில் உள்ள மேஜை மீது வீசியுள்ளார். ஆனால் கழுத்தில் மஞ்சள் கயிற்றால் கட்டப்பட்ட மற்றொரு தாலி இருந்தது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

இளம்பெண், சேலம் கோரிமேட்டை சேர்ந்த செந்திலை திருமணத்திற்கு முன் காதலித்து வந்ததும், தற்போது திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த புதுமாப்பிள்ளை, திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் இதுபற்றி சொல்லியிருக்கலாம். திடீரென்று இப்படிச் செய்து தன்னை அவமானப்படுத்தி விட்டாயே என காவல்நிலையத்தில் கதறி அழுதார்.

கணவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தப் போகிறாயா என்று போலீசார் கேட்டனர். ஆனால் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட காதலனுடன் தான் செல்வேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் மகளை சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும், அப்பெண் விடாப்பிடியாக இருந்தார். கடைசியில் காதலன் கட்டிய தாலியை கூட தூக்கி எறிந்தார். தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிடுவதாகவும், பெற்றோருடன் வசிக்க போவதாகவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here