ஒருதொகை போதைமாத்திரைகளுடன் இருவரை வவுனியா விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
வவுனியா பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, யாழில் இருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி பயணித்த தனியார் பேருந்தை வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வழிமறித்த பொலிசார் அதில் சோதனையை முன்னெடுத்தனர்.
இதன்போது மறைத்துவைக்கப்பட்ட நிலையில் பெருமளவான போதை மாத்திரைகள் மீட்கப்பட்டது.
அதனை உடமையில் வைத்திருந்த தென்பகுதிகளை சேர்ந்த இரண்டு நபர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை நீதிமன்றில் முற்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.