யாழில் நிமோனியா காய்ச்சலால் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்.!

0
83

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நிமோனியாக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியைச் சேர்ந்த யுவானிஸ் நேசராசா (வயது-42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 30ஆம் திகதி முதல் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு திடீரென உடல்நிலை மோசமடைந்ததால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்ப்பிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

இவர் நிமோனியாக் காய்ச்சலால் உயிரிழந்தார் என்று உடற்கூற்றுப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here