கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை – கோரக்கன்கட்டு பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
நெல் அறுவடை இயந்திரத்தில் நீர் மூலம் சுத்திகரிப்பில் ஈடுபட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வையிரவர் கோவிலடி பரந்தனைச் சேர்ந்த 31 வயதான பிரான்சித் ரஜீவன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உறவினர் ஒருவரது வீட்டில் வைத்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.