இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,200 போதை மாத்திரைகள் அடங்கிய பொதியுடன் இளைஞன் ஒருவன் மன்னார் – முருங்கன் பஜார் பகுதியில் வைத்து சனிக்கிழமை (4) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த நபர் சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றதுடன் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என முருங்கன் பொலிஸார் தெரிவித்தனர்.