பண்டாரவளை விபத்தில் மூவர் கவலைக்கிடம்.!

0
40

பண்டாரவளை- தியத்தலாவ வீதியில் அபதென்ன வத்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (05) பிற்பகல் கெப் வண்டியொன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் விழுந்ததில் மூவர் காயமடைந்து தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை அவல்லபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 44, 36 மற்றும் 14 வயதுடைய மூவரே விபத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை நகருக்கு வந்து வண்டியை பண்டாரவளை தியத்தலாவ வீதியின் அம்பத்தன்ன பகுதியில் வீதிக்கு அருகில் நிறுத்தி வைத்திருந்தபோது மண்மேடு சரிந்ததில், அந்த கெப், பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here