இந்தியாவில் இரு குழந்தைகளுக்கு HMPV வைரஸ்..!

0
65

இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு HMPV என்ற புதிய வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் முதலில் சீனாவில் இருந்து தான் பரவத் தொடங்கியது. இதனை வெளி உலகத்திற்கு சீனா மறைக்கிறது என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று இருப்பதை ICMR உறுதி செய்துள்ளது.

சீனாவில் அதிக அளவில் பரவி வரும் இந்த வைரஸ், பெங்களூருவில் 8 மாத ஆண் குழந்தைக்கும், 3 மாத பெண் குழந்தைக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் வேகமாக பரவும் Human Metapneumovirus சாதாரண, சளி காய்ச்சல், மூச்சு திணறல் அறிகுறிகளையே இந்த வைரஸ் கொண்டுள்ளது. அதேநேரம், தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தி நிமோனியா, ஆஸ்துமா, நாள்பட்ட தடுப்பு நுரையீரல் தோற்று போன்ற நோய்களை கொண்டு வரலாம். அறிகுறிகள் பல நாள்கள் தொடர்ந்தால் மருத்துவரை அணுக வேண்டும். பெரும்பாலானோருக்கு பெரிய தாக்கம் இல்லாமல் இந்த நோய் குணமாகிவிடுகிறது.

இதற்கான தடுப்பு வழிமுறைகள்…

  • பரவலைக் கட்டுப்படுத்த சோப்பு தண்ணீரில் குறைந்தது 20 வினாடிகளுக்கு கைகளை கழுவ வேண்டும்.
  • இருமல் அல்லது தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளவும்.
  • முகமூடி அணியவும், நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்பைத் தவிர்க்கலாம்.
  • கழுவப்படாத கைகளால் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்கலாம்.
  • நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக அறையில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2001ல் கண்டறியப்பட்ட இந்த வைரஸ்க்கு தனிப்பட்ட சிகிச்சையோ, மருந்தோ இல்லை. காய்ச்சல் சளிக்கான மருத்துவம் எடுப்பது, உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுதல், ஓய்வு எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இளம் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் இந்த HMPV தொற்றால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் எனக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here