இலங்கையில் நுண்நிதிக் கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் மரணம்.!

0
7

இலங்கையில் கடந்த சில வருடங்களில் நுண்நிதிக் கடன் வலையில் சிக்கிய சுமார் 200 பெண்கள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தேசிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் 28 இலட்சம் பேர் நுண்நிதிக் கடன் பெறுகின்றனர், அதில் 24 இலட்சம் பேர் பெண்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையிலுள்ள நுண் நிதி நிறுவனங்கள் 38 தொடக்கம் 40 சதவீதம் வரை அதிக வட்டிக்கு கடன் வசதிகளை வழங்குவதாகவும், கடனை செலுத்த முடியாத சில பெண்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சில பிரதிநிதிகளினால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதாகவும் ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலைமையினால் குடும்பங்களுக்கிடையில் முரண்பாடுகள் வளர்ந்து பிள்ளைகள் ஆதரவற்றவர்களாக மாறியுள்ளதாகவும், சில பெண்கள் வேலை செய்ய வீட்டையும் நாட்டையும் விட்டு வெளியேறத் தூண்டப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சிறு நிதி கடன் பிரச்சினையால் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் கடுமையான பொருளாதார அழுத்தத்தில் உள்ளனர். அவர்களில் பலர் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் இல்லாமல், பதிவு செய்யப்பட்ட வங்கிகளில் கடன் பெற முடியாமல் நுண்கடன் நிறுவனங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிறுவனங்கள் வாரத்திற்கு 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிக வட்டி வீதங்களுடன் வசூலிக்கின்றன, இதனால் பெண்கள் கடனில் தள்ளப்படுகிறார்கள்.

நுண்கடன் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டு வந்துள்ள போதிலும், அது இன்னும் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here